இந்தியாவிற்கு கோல் எப்படியோ, அதேபோல பாகிஸ்தானுக்கு பாபச் அசாம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 22 வயது பாபர் அசாம் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதுவரை ஒரு டெஸ்ட்களில் செஞ்சுரி அடித்ததில்லை. ஆனால், 18 ஒருநாள் போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.

இவரை விராட் கோலிக்கு இணையாகப் புகழ்கிறார் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

அதே வயதில் விராட் கோலிக்கு நிகரான திறமை கொண்டவர். இந்தியாவிற்கு கோலி போல, பாகிஸ்தானுக்கு பாபர். இது உச்சபட்ச பாராட்டாக இருந்தாலும் அதற்குத் தகுதியானவர்.

இளம் வீரராக இருந்தாலும் வரும் காலத்தில் அனைவராலும், பாராட்டப்படும் வீரராக வளர்வார் என்பது உறுதி” என்று மிக்கி கூறினார்..