kohli double century in secon test match

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி, அபாரமாக ஆடி இரட்டை சதம் விளாசினார்.

இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் நாளிலேயே 205 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் 7 ரன்களில் வெளியேறினார். எனினும் சிறப்பாக விளையாடிய முரளி விஜயும் புஜாராவும் சதம் விளாசினர். 

இதைத்தொடர்ந்து கைகோர்த்த கோலியும் ரோஹித்தும் அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி, 259 பந்துகளுக்கு இரட்டை சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் கோலியின் 5வது இரட்டை சதம் இதுவாகும். 267 பந்துகளில் 213 ரன்கள் எடுத்த கோலி, பெரேராவின் பந்துவீச்சில் திரிமன்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரோஹித் சர்மா சதத்தை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார். 574 ரன்கள் குவித்துள்ள இந்திய அணி, இலங்கையைவிட 369 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா ஆடிக்கொண்டிருக்கிறது.