Asianet News TamilAsianet News Tamil

மைதானத்தில் ஜாலியா டான்ஸ் ஆடிய கேப்டன் கோலி.. வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது கோலி ஜாலியாக டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது. 
 

kohli dancing while fielding in adelaide
Author
Australia, First Published Dec 8, 2018, 4:04 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது கோலி ஜாலியாக டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்துள்ளது. புஜாராவும் ரஹானேவும் களத்தில் நிற்கின்றனர். 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்த விராட் கோலி ஜாலியாக டான்ஸ் ஆடினார். இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் ஸ்டார்க்கை பும்ரா வீழ்த்தினார். பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. மழை நின்றபிறகு டிராவிஸ் ஹெட்டும் நாதன் லயனும் களத்திற்கு வந்தனர். அப்போது ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேப்டன் கோலி, மகிழ்ச்சியாக டான்ஸ் ஆடினார். 

மழை குறுக்கிட்டது, அதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது ஆகியவற்றிற்கெல்லாம் அசராத விராட் கோலி, ஜாலியாக டான்ஸ் ஆடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios