Asianet News TamilAsianet News Tamil

தரமான சம்பவம் பண்ணிட்டீங்க பாய்ஸ்!! கோலி பாராட்டு

kohli congrats indian team for the winning against bangladesh
kohli congrats indian team for the winning against bangladesh
Author
First Published Mar 19, 2018, 4:40 PM IST

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா திரில் வெற்றி பெற்றதே பிரதான பேசுபொருளாக உள்ளது. அதிலும் தினேஷ் கார்த்திக்கின் மிரட்டல் பேட்டிங்தான் இன்றைய ஹாட் டாபிக். திரில்லர் வெற்றி பெற்ற இந்திய அணி, பாராட்டு மழையில் நனைந்துவரும் நிலையில், கேப்டன் விராட் கோலியும் இந்திய அணியை பாராட்டியுள்ளார்.

இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களின் முடிவில் 166 ரன்கள் எடுத்தது.

167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி அரைசதம் கடந்தார். இதற்கிடையே தவான், ரெய்னா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராகுலும் 24 ரன்களில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ரோஹித், 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

kohli congrats indian team for the winning against bangladesh

மனீஷ் பாண்டேவும் விஜய் சங்கரும் சற்று மந்தமாக ஆடியதால், 3 ஓவர்களுக்கு 35 என்ற இக்கட்டான நிலை உருவானது. 18 ஓவரின் 4 பந்துகளையும் விஜய் சங்கர் அடிக்க தவறினார். 5வது பந்தில் எல்பி முறையில் ஒரு ரன் எடுக்க, கடும் அழுத்தத்தில் இருந்த மனீஷ் பாண்டே தூக்கி அடித்து அவுட்டானார்.

இதையடுத்து 2 ஓவருக்கு 34 ரன்கள் என்ற கடின நிலை உருவானது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 19 ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள், ஒரு 2 ரன் என மொத்தமாக 22 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரிலும் தினேஷ் அடித்தே ஆடினார். கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்களின் ரத்த அழுத்தத்தை எகிற செய்து, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அந்த பந்தில், சிக்ஸர் விளாசி அணியை வெற்றியடைய செய்தார் தினேஷ் கார்த்திக்.

kohli congrats indian team for the winning against bangladesh

8 பந்துகளுக்கு 29 ரன்கள் குவித்து, தோற்க வேண்டிய போட்டியை வென்று கொடுத்து நிதாஹஸ் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமானார் தினேஷ்.

kohli congrats indian team for the winning against bangladesh

இந்திய அணியின் வெற்றியையும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியையும் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் ஜாம்பவான்கள், முன்னாள் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தொடரில் விளையாடாத இந்திய கேப்டன் விராட் கோலியும் டுவிட்டரில் பாராட்டியுள்ளார். தனது டுவிட்டரில், என்ன ஒரு அருமையான போட்டி.. அணியின் முழுமையான சிறப்பான செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என கோலி பாராட்டியுள்ளார். தினேஷ் கார்த்திக்கையும் பாராட்டியுள்ளார்.

What a game of cricket last night, Complete team performance! Big up boys!!! 💪👌Well done DK @DineshKarthik 👊@BCCI #NidahasTrophy2018 #INDvsBAN
— Virat Kohli (@imVkohli) March 19, 2018

Follow Us:
Download App:
• android
• ios