kohli century in last one day match against newzealand
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் கோலி ஆகியோரின் அதிரடியான சதங்களால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். ஷிகர் தவான், 14 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானத்துடன் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வருகின்றனர்.
அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 106 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில், இது ரோஹித் சர்மாவின் 15-வது சதமாகும். ரோஹித்தைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் சதமடித்து அசத்தினார்.
மூன்றாவது இரட்டை சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த ரோஹித் சர்மா, 147 ரன்களில் லாங் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ரோஹித்தின் சதத்தை தொடர்ந்து கேப்டன் கோலியும் சதமடித்து அசத்தினார். 96 பந்துகளில் கோலி சதமடித்தார். இது கோலியின் 32 சதமாகும். மேலும் 9000 ரன்களையும் எட்டிவிட்டார் கோலி. ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் வெளியேற, கோலியும் தோனியும் விளையாடி வருகின்றனர்.
44 ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்துள்ளது.
