Kidambi Srikanth enters Australian Open semis

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தாலும், ஆண் வீரர்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து முன்னேறி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் பிரனீத் அசத்தல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்தச் சூழலில் காலிறுதியில் வெற்றி பெற்ற மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதியில் ஷி ஒயை எதிர்கொண்டார்.

போட்டி தொடங்கிய நிமிடம் முதல் இறகுப் பந்து கிடாம்பி சொல் படியே கேடடு வந்தது. சர்வீஸ் எடுக்க முடியாமல் சீன வீரர் திணற இறுதியில் 21 – 10 மற்றும் 21 – 14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிடாம்பி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப்பட்டியலில் 11 வது இடத்தில் இருக்கும் கிடாம்பி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.