பெண்களுக்கு  எதிரான  பாலியல்  வன்கொடுமை  நடைபெறுவதை  தடுக்கும் பொருட்டும் , பெண்கள்  தங்களை  பாதுகாத்துக்கொள்ளும்   வகையிலும் , கிக்பாக்ஸிங் பயிற்சியை கற்றுக் கொடுக்கிறார் நடிகை பிபாஷா பாசு

பிரபல  பாலிவுட்  நடிகையான  பிபாஷா பாசு, சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கண்டு வேதனையடைந்ததாக  தெரிவித்து இருந்தார்.

இதனை  தொடர்ந்து  பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்  கொள்ளும் வகையில் தற்காப்பு கலை பயில புதிய பயிற்சி மையம் தொடங்க இருப்பதாக  அவர்  தெரிவித்துள்ளார்

இந்த  பயிற்சி  மையத்தில்   பெண்களுக்கான கிக்பாக்ஸிங் உள்ளிட்ட பல தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட இருப்பதாகவும், இந்த  பயிற்சியில் சேர்வதற்கு  வயது வரம்பு 13 முதல் 30 வயது வரை இருக்க  வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது .

பொதுவாகவே  பெண்கள் இது  போன்ற  தற்காப்பு  கலையை  பயின்று  வந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு  அதுவே  துணையாக  இருக்கும் என்பதில் எந்த மாற்று   கருத்தும் இருக்காது .