இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (27) நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து வில்லியம்சன், "ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி. மிகச் சிறந்த வீரர்களைக் கொண்டுள்ள அந்த அணிக்கு தலைமை ஏற்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வார்னருடன் தொடர்பில் இருந்து வருகிறேன். எந்த அணியும் இதுபோன்று தவறிழைக்கக் கூடாது. வார்னர் தவறான நபர் அல்ல. அவரும், ஸ்மித்தும் தங்களது செயலுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டனர். ஆகச் சிறந்த பேட்ன்ஸ்மேன்களான இருவரும் தங்களது தவறின் மூலம் அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்" என்று அவர் தெரிவித்தார்.

ஐதரபாத் அணியின் கேப்டனாக செயல்படவிருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் வில்லிம்சனை கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்துள்ளது.