Just hit 27 runs as the team to beat Bangalore to Pune on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் ஆட்டத்தில் வெரும் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பங்கமாக வீழ்த்தியது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் ஆட்டம் பெங்களூர் – புணே அணிகளுக்கு இடையே பெங்களூரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்தது புணே அணி. அஜிங்க்ய ரஹானே - திரிபாதி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 63 ஓட்டங்கள் சேர்த்தது. ரஹானே 25 பந்துகளில் 30 ஓட்டங்களும், திரிபாதி 23 பந்துகளில் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் கேப்டன் ஸ்மித் 27 ஓட்டங்களும், தோனி 28 ஓட்டங்களும், டேனியல் கிறிஸ்டியான் 1 ஓட்டமும், பென் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் எடுத்தது புணே.

இதன்பிறகு வந்த மனோஜ் திவாரி, வாட்சன் வீசிய 19-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாச, அந்த ஓவரில் 19 ஓட்டங்கள் கிடைத்தன. ஆடம் மில்னே வீசிய கடைசி ஓவரின் 5-ஆவது பந்தில் சிக்ஸரை விரட்டிய திவாரி, கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் சேர்த்ததால், புணே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுக்க முடிந்தது.

பெங்களூர் தரப்பில் ஆடம் மில்னே, அரவிந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர் மன்தீப் சிங் ரன் ஏதுமின்றி வெளியேற, கேப்டன் கோலி 19 பந்துகளில் 28 ஓட்டங்கள் சேர்த்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இப்படி தொடக்கமே சரிவாக இருந்தது.

அவரைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ் 29 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த கேதார் ஜாதவ் 18 ஓட்டங்கள், வாட்சன் 14 ஓட்டங்கள், பவன் நெகி 10 ஓட்டங்கள், ஸ்டூவர்ட் பின்னி 18 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்து பங்கமாக தோல்வி கண்டது.

புணே தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனால், 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றியைக் கைப்பற்றியது புணே அணி.