Junior Junior Champion Contest wins 3 gold in India
ஆசிய கேடட் மற்றும் ஜூனியர் ஜூடோ சாம்பியன் போட்டிகளில் 3 தங்கம் உள்பட 9 பதக்கங்களை இந்திய அணி வென்றது.
ஆசிய கேடட் மற்றும் ஜூனியர் ஜூடோ சாம்பியன் போட்டிகள் லெபனானில் நடைபெற்றது. 12-வது ஆசிய கேடட், மற்றும் 19-வது ஜூனியர் ஜூடோ போட்டிகளில் ரோஹிணி சம்பாஜி (40 கிலோ), தபாபி தேவி (44 கிலோ), பிங்கி பலஹாரா (52 கிலோ) ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
சிவக்குமார் (55 கிலோ), மோஷின் குலாப் அலி (60 கிலோ) ஆகியோர் வெள்ளியை கைப்பற்றினர்.
கிருஷ்ணா பௌதார் (44 கிலோ), துலிகா மான் (78 கிலோ), ஹர்ஷ்தீப் சிங் (81 கிலோ) கேடட் பிரிவிலும், ஜூனியர் பிரிவில் ஹரிஷ் (50 கிலோ) வெண்கலப் பதக்கம் வென்றனர்.
அதன்படி, மொத்தம் 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உள்பட 9 பதக்கங்களை இந்தியா அபாரமாக வென்றது.
