Jordan Shoe bid 1 coroe rupees



அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டானின் ஷூ ரூ.1 கோடியே 22 இலட்சத்துக்கு ஏலம் போனது.

லாஸ் ஏஞ்செலீஸ் 1984-ல் நடைப்பெற்ற ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்கா சாம்பியன் ஆனது.

அதன் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டானின் ஷூ தான் இந்த மதிப்பிற்கு விலைபோனது.

இதுதான், விளையாட்டு வீரர் ஒருவர் பயன்படுத்திய பிறகு அதிக தொகைக்கு ஏலம்போன பொருள்.

முன்னதாக 1997-இல் நடைபெற்ற என்பிஏ இறுதி ஆட்டத்தில் ஜோர்டான் பயன்படுத்திய ஷூ ரூ.67 இலட்சத்துக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. தற்போது ஏலத்தில் விடப்பட்ட ஷூவின் அளவு 13 அங்குலம் ஆகும். அதை கூடைப்பந்து களத்தில் ஜோர்டான் முழுமையாக பயன்படுத்தியபோதிலும், அது நல்ல நிலையில் இருப்பதாக எஸ்சிபி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.