Jokovic has been tired of his trainer and training team ...
டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தனது பயிற்சியாளரையும், பயிற்சிக் குழுவையும் கைகழுவினார்.
ஜோகோவிச் (29), கடந்த நவம்பரில் பிரிட்டனின் முர்ரேவிடம் தோல்வியுற்று முதலிடத்தை இழந்தார்.
பின்னர், கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் 2-ஆவது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார்.
இப்படி ஜோகோவிச், கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் வெற்றி எதுவும் பெறவில்லை என்பதால் தனது முதலிடத்தை இழந்தார்.
இந்நிலையில் தொடர் தோல்வியிலிருந்து மீள தனது நீண்ட நாள் பயிற்சியாளரான மரியான் வஜ்டாவையும், பயிற்சிக் குழுவையும் பிரிந்தார்.
இது தொடர்பாக ஜோகோவிச் கூறியது:
“இப்போது எடுத்திருக்கும் முடிவு, நான் மீண்டும் உச்சகட்ட ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவும். களத்தில் மீண்டும் வெற்றிகளைக் குவிப்பதில் தீவிரமாக இருக்கிறேன்.
புதிய பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக சிந்தித்து வருகிறேன். ஆனால், புதிய பயிற்சியாளர் விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். சரியான பயிற்சியாளரை தேர்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது' என்றார்.
