John Gregory appointed as head coach for Chennai FC team

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் அணிகளில் ஒன்றான சென்னையின் எஃப்சி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கிரேகரி நியமிக்கப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்துள்ள ஜான் கிரேகரிக்கு, கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளராக மொத்தம் 40 ஆண்டுகால அனுபவம் உள்ளது.

இங்கிலாந்து கால்பந்து கிளப்புகளில் ஒன்றான போர்ட்ஸ்மெளத் அணியின் பயிற்சியாளராக தனது முதல் பொறுப்பை தொடங்கிய ஜான், அதைத் தொடர்ந்து பல்வேறு கிளப் அணிகளின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்துள்ளார். இறுதியாக, கிராவ்லே டவுன் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையின் எஃப்சி அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து ஜான் கிரேகரி கூறியது:

“சென்னையின் எஃப்சி அணியுடன் இணைந்து பணிபுரிய ஆர்வத்துடன் உள்ளேன். ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் மிகுந்த நிலைத்த தன்மையுடன் ஆடக் கூடிய அணிகளில் சென்னையும் ஒன்று. மெட்டாரஸி விட்டுச் சென்ற பணிகளை சிறப்புடன் தொடர விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

முதல் மூன்று சீசன்களில் இந்தப் பொறுப்பில் இருந்த இத்தாலியின் மார்கோ மெட்டாரஸிக்குப் பதிலாக, தற்போது ஜான் கிரேகரி பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.