Jessna drowned Deepika



ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நேற்றைய இறுதிச் சுற்றில் ஜோஷ்னா, சகநாட்டவரான தீபிகா பலிக்கலையுடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 13-15, 12-10, 11-13, 11-4, 11-4 என்ற செட் கணக்கில் தீபிகா பலிக்கலைத் தோற்கடித்து வாகைச் சூடினார் ஜோஸ்னா சின்னப்பா.