Asianet News TamilAsianet News Tamil

முக்கியமான 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்திய ஜடேஜா.. ஜட்டுவின் மிரட்டலான ரன் அவுட் வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜா, அருமையான ரன் அவுட் ஒன்றை செய்து மிரட்டினார்.
 

jadeja took 2 important wickets in second odi
Author
Australia, First Published Jan 15, 2019, 11:53 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜா, அருமையான ரன் அவுட் ஒன்றை செய்து மிரட்டினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கலீல் அகமதுவுக்கு பதிலாக சிராஜை சேர்த்தது. முதல் போட்டியில் ஆடிய அதே ஆஸ்திரேலிய அணிதான் இந்த போட்டியிலும் களமிறங்கியது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபின்ச்சும் அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கினர். முதல் 7 ஓவர்கள் வரை ரன்களை குவிக்க அவசரப்படாமல், நிதானமாக ஆடினர். ஆனால் 7வது ஓவரின் கடைசி பந்தில் ஆரோன் ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் புவனேஷ்வர் குமார். 19 பந்துகளிஇல் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஃபின்ச் அவுட்டானதற்கு அடுத்த ஓவரிலேயே அலெக்ஸ் கேரியை ஷமி வீழ்த்தினார். 

26 ரன்களுக்கே அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், உஸ்மான் கவாஜாவும் ஷான் மார்ஷும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இந்திய அணியின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். எனினும் இந்த பார்ட்னர்ஷிப்பை ஜடேஜா உடைத்தார். உஸ்மான் கவாஜாவை அருமையான ரன் அவுட் மூலம் வெளியேற்றினார். கவாஜாவை ரன் அவுட்டாக்கிய ஜடேஜா, ஹேண்ட்ஸ்கம்ப்பை 20 ரன்களில் வெளியேற்றினார். 

கவாஜாவை செய்த ரன் அவுட் அருமையானது. நேரடியாக ஸ்டம்ப்பில் அடித்து மிரட்டினார். மிகச்சிறந்த ஃபீல்டரான ஜடேஜா, அவருடையா ஃபீல்டிங்கிற்காகவே அணியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த விக்கெட்டான ஹேண்ட்ஸ்கம்ப்பை தோனி தனக்கே உரிய ஸ்டைலில் ஸ்டம்பிங் செய்து அனுப்பினார். இருவரும் தங்கள் டிரேட் மார்க் ஆட்டத்திறனின் மூலம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 29 ரன்களில் ஷமி பவுலிங்கில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் சதமடித்தார். ஷான் மார்ஷும் மேக்ஸ்வெல்லும் ஆடிவருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios