jadeja got first place in bowliing

ஐசிசி-யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் முதலிடத்தில் இருந்த அஸ்வின், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில், இந்திய வீரர்களான ஜடேஜா தரவரிசையில் இந்த ஏற்றத்தைக் கண்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 124 ஒட்டங்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளையும், 2-ஆவது இன்னிங்ஸில் 52 ஓட்டங்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அதன்மூலம், ஏழு புள்ளிகளைப் பெற்று, மொத்தம் 899 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.

அஸ்வின், 862 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதுவரை முதலிடத்தில் இருந்த அஸ்வினை பின்னுக்குத் தள்ளி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ஜடேஜா.

ஆனால், 900 அல்லது அதனை நெருங்கிய புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பட்டியலில் அஸ்வின் 904 புள்ளிகள் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெயரை ஜடேஜா பெற்றுள்ளார்.