ISL update Bangalore team has beaten Pune and won the 4th victory.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) - 4 கால்பந்து போட்டியின் 23-வது ஆட்டத்தில் புனே சிட்டி அணியை 3-1 என்ற கணக்கில் பெங்களூரு எப்.சி. அணிகள் வெற்றிக் கொண்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) - 4 கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் 35-வது நிமிடத்தில் புனே வீரர் ஈசாக் தட்டிக் கொடுத்த பந்தை சக வீரர் அடில்கான் பாய்ந்து தலையால் முட்டி கோலாக்கி அட்டகாசப்படுத்தினார். அதன்படி, முதல் பாதியில் புனே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடந்த இரண்டாவது பாதியில் 56-வது நிமிடத்தில் புனே வீரர் பல்ஜித் சைனி 2-வது முறையாக மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார். இரண்டு மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் புனே அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

இதை சாதகமாக பயன்படுத்தி பெங்களூரு வீரர் மிகு 64 மற்றும் 74-வது நிமிடங்களில் கோல் போட்டு அசத்தினார். கடைசி நிமிடத்தில் பெங்களுரு நட்சத்திர வீரர் சுனில் சேத்ரியும் தனது பங்குக்கு ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இறுதியில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.

பெங்களூரு அணி இதுவரை 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் எடுத்து 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஆறாவதுஆட்டத்தில் ஆடிய புனேவுக்கு இது மூன்றாவது தோல்வியாகும்.