ISL Chennai defeated the first team to win the first victory in Chennai
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் சென்னையின் எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வீழ்த்தி சொந்த மண்ணில் முதல் வெற்றியை ருசித்தது.
சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைப்பெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் ஆறாவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வீழ்த்தியதன்மூலம் சொந்த மண்ணில் முதல் வெற்றியை ருசித்து அசத்தியுள்ளது.
விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை வீரர்கள் அப்துல் நெதியோதத் 11-வது நிமிடத்திலும், ரஃபேல் அகஸ்டோ 24-வது நிமிடத்திலும், முகமது ரஃபி 84-வது நிமிடத்திலும் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம், தனது முதல் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணியிடம் கண்ட தோல்வியில் இருந்து மீண்டுள்ளது சென்னை அணி.
அதேவேலையில், ஜாம்ஷெட்பூருடனான முதல் ஆட்டத்தை கோல் இன்றி சமன் செய்திருந்த நார்த்ஈஸ்ட் அணிக்கு இது முதல் தோல்வி.
