Asianet News TamilAsianet News Tamil

3வது பந்துலயே ஸ்டம்பை புடுங்கி எறிந்த இஷாந்த்!! 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின்.. ஆஸி.,க்கு பதிலடி கொடுக்கும் இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. 
 

ishant sharma and ashwin bowling well and took australian wickets
Author
Australia, First Published Dec 7, 2018, 9:05 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் அபார சதத்தால் 250 ரன்களை சேர்த்தது. 

முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை சேர்த்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் ஹேசில்வுட் வீசிய முதல் பந்திலேயே ஷமி அவுட்டானதால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஃபின்ச் மற்றும் அறிமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, மூன்றாவது பந்திலேயே ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். ஃபின்ச் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

ishant sharma and ashwin bowling well and took australian wickets

பின்னர் மார்கஸ் ஹாரிஸுடன் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முடிந்தவரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆட முயன்றது. ஆனால் அஷ்வின் அந்த ஜோடியை பிரித்தார். மார்க்ஸ் ஹாரிஸை 26 ரன்களில் வெளியேற்றிய அஷ்வின், ஷான் மார்ஷை 2 ரன்னில் கிளீன் போல்டாக்கி அனுப்பினார். 

இதையடுத்து அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் உஸ்மான் கவாஜா மிகவும் நிதானமாக ஆடிவருகிறார். 100க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு இருபதுகளில் தான் ரன்களை எடுத்துள்ளார் கவாஜா. அந்தளவிற்கு நிதானமாக ஆடிவருகிறார். விக்கெட்டை இழந்துவிடாமல் ஹேண்ட்ஸ்கோம்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்து வருகிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios