Is kohli marginalize dhoni
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 5-1 என இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க முதல் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை ஒரே தொடரில் 5 ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய பெருமையை ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி பகிர்கிறது.

இந்த தொடர் முழுவதும் கோலி சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதேபோல சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் பவுலிங்கில் மிரட்டினர். இந்த தொடரில் மட்டும் கோலி 558 ரன்கள் குவித்து ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடைசி ஒருநாள் போட்டியில் தோனியை 4வது இடத்தில் களமிறக்காதது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒருநாள் போட்டியில் 9967 ரன்களை குவித்துள்ளார் தோனி. 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை தோனி எட்ட, இன்னும் 33 ரன்களே தேவை.

இந்த மைல்கல்லை தோனி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலேயே எட்டிவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆர்வமாகவும் இருந்தனர். அதனால் நேற்றைய போட்டியில் நான்காவது வீரராக தோனி களமிறக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம்போலவே 4வது இடத்தில் ரஹானேவை இறக்கினார் கோலி.

கோலியும் ரஹானேவும் இலக்கை எட்டி வெற்றி பெற்றுவிட்டதால், தோனிக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் 10000 ரன்களுக்கு அடுத்த தொடர் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியது.

கோலியின் இந்த செயலால் தோனியின் ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்களே அதிருப்தியில் உள்ளனர். கோலிக்காக தனது டாப் ஆர்டர் இடத்தை விட்டுக் கொடுத்தவர் தோனி. ஆனால் தற்போது தோனியிடமே அரசியல் செய்கிறார் கோலி என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியில், இதுவரை சச்சின், கங்குலி, டிராவிட் மட்டுமே ஒருநாள் போட்டியில் 10000 ரன்களை கடந்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தோனி 10000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
