உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி வெற்றிப் பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஹராரேவில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் அயர்லாந்து – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 9 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் எடுத்தது. ஆன்டி பால்பிர்னி 105 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். 

அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 47.4 ஓவர்களில் 246 ஓட்டங்களுக்கு ஆல் ஔட் ஆனது. இதன் மூலம் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்றது. இதனால், அந்த அணி இறுதிப்போட்டி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. 

சூப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஜிம்பாப்வே அணி மோதுகின்றன.