IPL updat Bangalore - Mumbai todays clash

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸýம், மும்பை இண்டியன்ஸும் இன்று மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி உடற்தகுதி சோதனையில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் களமிறங்குவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

பெங்களூர் அணி இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியையும், இரு தோல்விகளையும் சந்தித்துள்ளது.

அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டிவில்லியர்ஸ் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.

கிறிஸ் கெயில், கேதார் ஜாதவ், மன்தீப் சிங், ஸ்டூவர்ட் பின்னி போன்ற நட்சத்திர வீரர்கள் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் டைமல் மில்ஸ், பில்லி ஸ்டான்லேக் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல், பவன் நெகி ஆகியோரையும் நம்பியுள்ளது பெங்களூர்.

மும்பை அணி, பலம் வாய்ந்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் பெங்களூர் அணியை சந்திக்கிறது.

இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடிய மும்பை அணி 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

மும்பை அணி பேட்டிங், பந்துவீச்சு என இரு துறைகளிலும் பலம் வாய்ந்ததாக உள்ளது.

பேட்டிங்கில் பார்த்திவ் படேல், ஜோஸ் பட்லர், கேப்டன் ரோஹித் சர்மா, நிதிஷ் ராணா, கிருனால் பாண்டியா, ஹார்திக் பாண்டியா போன்றோர் பலம் சேர்க்கின்றனர்.

இதேபோல் பாண்டியா சகோதரர்கள் அதிரடியாக ஆடி வருவது மும்பை அணியின் பின்வரிசை பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறது.

வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, மலிங்கா, மெக்லீனாகான் கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் பலம் சேர்க்கிறார்.

இந்தப் போட்டி இன்று மாலை 4 மணிக்கு, சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் ஆகிய தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகும்.