ipl champions cup in dhoni by harbhajan singh

ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் போட்டியில், சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது: எங்க டீமுக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது அன்ப கொட்டிக்கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரக்குடுத்தாச்சும் கப் ஜெய்ச்சு பெருமை சேக்கனும்ங்கற பயம் நிறையா இருக்கு.

ஒரே ஒரு ஆசை தான்,@IPL முடியும்போது "தல" கைல கப் இருக்கணும்,ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் @ChennaiIPL #கற்றவை”.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ஹர்பஜன் சிங், அவ்வப்போது தமிழில் டுவிட்களை தட்டிவிடுகிறார்.

Scroll to load tweet…