ஐபிஎல் 2025 : ஹே அண்ணன் வரார் வழிவிடு; தோனியைத் தக்கவைத்த CSK - வீரர்களின் முழு பட்டியல் இதோ!

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒரு முக்கியமான முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

IPL 2025 CSK Retained MS Dhoni as uncapped player full details ans

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, இன்று வியாழக்கிழமை தனது புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனியை வெறும் ரூ.4 கோடிக்கு அன்-கேப்ட் வீரராகத் தக்கவைத்துக் கொண்டது. குறைந்தது ஐந்து ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்களை அன்-கேப்ட் வீரர்களாக ஏலம் விட அனுமதிக்கும் விதியை ஐபிஎல் மீண்டும் கொண்டுவந்ததால் இந்த தக்கவைப்பு சாத்தியமானது.

கெத்து காட்டும் ஐபிஎல் 2025 – 10 அணிகளின் தக்கவைக்கப்படும் வீரர்களின் உத்தேச பட்டியல்!

2008ல் முதலில் செயல்படுத்தப்பட்டு பின் 2021ல் நீக்கப்பட்ட இந்த விதி, தோனி தனது புகழ்பெற்ற ஐபிஎல் வாழ்க்கையைத் தொடர வழிவகுத்துள்ளது என்றே கூறலாம். தோனியின் வருகை குறித்த அறிவிப்பு சென்னை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பான தங்கள் 'தல' தோனி தனது 18வது சீசனுக்காகத் திரும்புவாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

IPL போட்டிகள் தொடங்கியதிலிருந்து, தோனி சிஎஸ்கேவுக்கு ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் CSK அணி ஐந்து ஐபிஎல் போட்டிகளை வெல்ல வழிவகுத்தார் தோனி என்றால் அது மிகையல்ல. கடந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு தலைமைப் பொறுப்பைக் கொடுத்த பிறகு, ரசிகர்கள் தோனி மீண்டும் வருவாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் இப்பொது, அவர் தோனி தக்கவைக்கப்பட்ட செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தூண்டியுள்ளது. அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், தோனியின் சாதனைகளைக் கொண்டாடும் மீம்ஸ்களைப் பகிரவும் ஆரமித்துள்ளனர். 

தோனிக்கு கூடுதலாக சிஎஸ்கே, ருதுராஜ் கெய்க்வாட் ரூ.18 கோடிக்கும், மதீஷா பதிரான ரூ.13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜா ரூ. கோடிக்கும் தக்கவைத்துள்ளது. ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொண்ட சிஎஸ்கே, தனது ரூ.120 கோடி பர்ஸில் ரூ.65 கோடியைப் பயன்படுத்தியுள்ளது, மேலும் ரூ.55 கோடியுடன் வரவிருக்கும் ஏலத்தில் தனது அணியை வலுப்படுத்த உள்ளது.

ஆளவிட்டா போதுமுன்னு லக்னோவிலிருந்து விலகும் கேஎல் ராகுல் – ஆர்சியில் இணைய திட்டம்?

ஐபிஎல் 2025க்காக தோனியைத் தக்கவைத்ததற்கு ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்திருக்கிறார்கள் பாருங்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios