Asianet News TamilAsianet News Tamil

ipl 2022 anushka sharma: அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து முதல்முறையாக ஐபிஎல் போட்டியை ரசித்த பெண்: வைரல் வீடியோ

ipl 2022 anushka sharma :நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து முதல்முறையாக ஐபிஎல்டி20 போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு இளம் பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

ipl 2022 anushka sharma : This lucky woman was able to watch an IPL match with Anushka Sharma
Author
Mumbai, First Published Apr 25, 2022, 11:50 AM IST

நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து முதல்முறையாக ஐபிஎல்டி20 போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு இளம் பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

அந்த இளம் பெண் இதுவரை ஐபிஎல் டி20 போட்டியை இதுவரை நேரடியாகப் பார்த்ததில்லை என்பதால், போட்டியை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு, அதிலும் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து போட்டியைக் காணும் வாய்ப்பால் மகிழ்ச்சி அடைந்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்த்த அனுஷ்காவின் கைதட்டல்கள், ஆர்ப்பரிப்புகள், முகபாவனைகளை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் இன்ஸ்டாகிராமில் ரவீணா அஹுஜா என்ற இளம் பெண் வெளியிட்டார். இதற்கு லட்சக்கணக்கான லைக்குகள் கிடைத்து, இந்த வீடியோ வைரலாகியுள்ளது. 

ipl 2022 anushka sharma : This lucky woman was able to watch an IPL match with Anushka Sharma

ரவீணா இதுநாள்வரை ஐபிஎல் போட்டியை நேரடியாக மைதானத்துக்குச் சென்று பார்த்தது இல்லை. ஆனால், மும்பை வான்ஹடை மைதானத்துக்கு முதல்முறையாகச் சென்று ஆர்சிபி அணியின் ஆட்டத்தைப் பார்த்தபோது அங்கு கார்ப்பரேட் பாக்ஸில் அனுஷ்கா சர்மாவும், அவரின் குடும்பத்தாரும் இருந்தது ரவிணாவுக்கு இன்பஅதிர்ச்சியாக இருந்தது. அனுஷ்காவுடன் இணைந்து போட்டியைப் பார்த்த ரவீணா,  அனுஷ்காவுடன் புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளார். 

அனுஷ்கா சர்மாவுடன் அமர்ந்து ஐபிஎல் போட்டியைப் பாரத்தபின் ரவீணா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கருத்தில் “ என்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக மைதானத்துக்குச் சென்று ஐபிஎல் போட்டியை நேரடியாகப் பார்த்தேன். எனக்கு இது எப்போதுமே மிகச்சிறந்த அனுபவமாக மாறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios