International Squash Abhay Singh and Akansha progress in quarterfinals

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் மற்றும் அகான்ஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

பிஎஸ்ஏ சார்பில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி பிலிப்பின்ஸின் மகாட்டி சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் தனது முதல் சுற்றில் சகநாட்டவரான ரவி தீக்ஷித்துடன் மோதினார்.

இதில், அபய் சிங் 11-5, 11-8, 11-8 என்ற நேர் செட்களில் ரவி தீக்ஷித்தை தோற்கடித்தார்.

அதேபோன்று, மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அகான்ஷா சலுங்கே மலேசியவின் நஜியா ஹனிஸுடன் மோதினார்.

இதில், அகான்ஷா சலுங் 3-11, 11-9, 13-11, 7-11, 11-9 என்ற செட் கணக்கில் நஜியா ஹனிஸை தோற்கடித்தார்.

வெற்றிப் பெற்ற இருவரும் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றிற்கு முன்னேறியுள்ளனர்.