International Master in chess and carom competition that started

இந்திய பெரும் துறைமுகங்களுக்கு இடையேயான செஸ் மற்றும் கேரம் போட்டியை இந்தியாவின் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டரான மானுவேல் ஆரோன் தொடங்கி வைத்தார்

இந்திய பெரும் துறைமுகங்களுக்கு இடையேயான செஸ் மற்றும் கேரம் போட்டி சென்னையில் நேற்றுத் தொடங்கியது. இது வரும் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான தொடக்க விழா சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்ரு நடைபெற்றது.

இதில் இந்தியாவின் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டரும், அர்ஜூனா விருது பெற்றவருமான மானுவேல் ஆரோன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மும்பை, கோவா, மங்களூர், விசாகப்பட்டினம், சென்னை, எண்ணூர் காமராஜர் உள்ளிட்ட 9 துறைமுகங்களைச் சேர்ந்த சுமார் 115 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை காமராஜர் துறைமுகமும், பெருந்துறைமுகங்களுக்கான விளையாட்டு மன்றமும் செய்துள்ளன.

இந்த நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார், பொதுமேலாளர்கள் கிருஷ்ணசாமி, ராதாகிருஷ்ணன், குணசேகரன்,போக்குவரத்து மேலாளர் கருப்பையா மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர் அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.