International boxing Mary Kom advanced to semis ...
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் அரையிறுதிச் சுற்றுக்கு அசத்தலாக முன்னேறி உள்ளார்.
சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் நடைபெறுகிறது. இதன் காலிறுதியின் 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் ருமேனியாவின் ஸ்டெலுடா தத்தாவுடன் மோதினார்.
ஸ்டெலுடா தத்தாவுடன் வீழ்த்தியதன்மூலம் மேரி கோம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலமாக அவர் சர்வதேச களத்தில் தொடர்ச்சியாக 3-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் இதுவரை, சீமா பூனியா (81 கிலோவுக்கு மேல்), சவீதி பூரா (75 கிலோ), மீனா குமாரி தேவி (54 கிலோ), பாக்யவதி கச்சாரி (81 கிலோ) ஆகியோர் தங்களது பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
இதில் சவீதி பூரா மற்றும் மீனா குமாரி தேவி ஆகியோர் காலிறுதியில் போட்டியிட்டு வென்ற நிலையில், சீமா பூனியா மற்றும் பாக்யவதி ஆகியோர் 'பை' வாய்ப்பு மூலமாக அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.
