சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் அமித் பாங்கல் மற்றும் விகாஸ் கிருஷன் தங்களது பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் நடைபெற்றது. இதில்,  49 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் அமித் பாங்கல், மொராக்கோவின் சையது மோர்தாஜியை வீழ்த்தினார்.

அதேபோன்று, 75 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் விகாஸ் கிருஷன், அமெரிக்காவின் டிராய் ஐஸ்லேவை தோற்கடித்தார்.

மற்றொரு பிரிவான 52 கிலோ பிரிவில் இந்தியரான கெளரவ் சோலங்கி, உக்ரைனின் டிமைட்ரோ ஜமோடேவிடம் தோற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

மகளிர் பிரிவில் மேரி கோம், சீமா பூனியா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 48 கிலோ பிரிவில் போட்டியிட்ட மேரி கோம், இறுதிச்சுற்றில் பல்கேரியாவின் செவ்தா அசினோவாவிடம் வீழ்ந்தார்.

அதேபோன்று 81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சீமா பூனியா, ரஷியாவின் அன்னா இவானோவாவிடம் தோற்று வெள்ளியுடன் வெளியேறினார்.

இந்தியா மொத்தமாக 2 தங்கங்கள், 3 வெள்ளிகள், 6 வெண்கலங்கள் என மொத்தம் 11 பதக்கங்கள் வென்றுள்ளது.