International Badminton Srikanth and Pranaye in the rankings Sindhu Saina collapse ...

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீர்கள் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் முன்னேற்றமும், சிந்து, சாய்னா, அஜய் ராம், சாய் பிரணீத் சரிவும் கண்டுள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், 11 இடங்கள் முன்னேறி 11-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தோனேசிய ஓபனில் முன்னணி வீரர்களான லீ சாங், சென் லாங் ஆகியோரை வீழ்த்தி அரையிறுதி வரை முன்னேறிய எச்.எஸ்.பிரணாய் 4 இடங்கள் முன்னேறி 21-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேநேரத்தில் இந்திய வீரர்களான அஜய் ஜெயராம், இரு இடங்களை இழந்து 15-வது இடத்திலும், சாய் பிரணீத் இரண்டு இடங்களை இழந்து முறையே 16-ஆவது இடத்திலும் உள்ளனர்.

அதேபோன்று மகளிர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் சாய்னா நெவால் ஓர் இடங்களை இழந்து 16-வது இடத்தையும், பி.வி.சிந்து ஓர் இடத்தை இழந்து 4-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.