Indus heroic march in the next round Nehwal Srikanth

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின், பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இராண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் பி.வி.சிந்து 21 - 17, 21 - 16 என்ற நேர் செட்களில் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை அருந்ததியை வீழ்த்தினார்.

அடுத்தச் சுற்றில் ஜப்பானின் சேனாவுடன் மோதுகிறார் சிந்து.

மற்றொரு ஆட்டத்தில், சாய்னா தனது முதல் சுற்றில் 21 - 10, 21 - 17 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷின் லீயைத் தோற்கடித்தார்.

அதேபோன்று ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா
21 - 17, 21 - 10 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தினார்.

மற்றொரு இந்தியரான சாய் பிரணீத் 16 - 21, 21 - 12, 21 - 19 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21 - 19, 21 - 16 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜாவ் ஜுன்பெங்கை தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.