Indias top squash trainer of choice for Asia Award
2016-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் தலைசிறந்த ஸ்குவாஷ் பயிற்சியாளர் விருதுக்கு இந்திய ஸ்குவாஷ் பயிற்சியாளர் சைரஸ் போன்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கு 7 நாடுகளைச் சேர்ந்த 13 பயிற்சியாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. அவர்களை அனைவரையும் ஓரம்கட்டிவிட்டு, அவர்களில் தலைச்சிறந்த பயிற்சியாளராக போன்சா தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்.
போன்சாவின் பயிற்சியின் கீழ் இந்திய அணி, உலக ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும், மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலத்தையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளியும், இந்திய ஆடவர் அணி வெண்கலமும் வென்றது என்பதும் இந்தியாவுக்கு பெருமைச் சேர்க்கும் நிகழ்வாக இன்றளவும் இருக்கிறது.
கடந்த ஆண்டு மேலும் பல போட்டிகளில் இந்திய அணி வாகை சூடியது என்பது கூடுதல் தகவல்.
