Indias silver and bronze medal in Asian Wrestling Championship

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், திவ்யா காக்ரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ரிது போகத் வெண்கலமும் வென்றுள்ளனர்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் மகளிர் 60 கிலோ எடைப் பிரிவில் சாக்ஷி மாலிக் பங்கேற்றார். இவர் தனது இறுதிச் சுற்றில் ஜப்பானின் ரிஸாக்கோ கவாயிடம் மோதினார்.

அதில், 0-2 என்ற புள்ளிகள் கணக்கில் ரிஸாக்கோ கவாய் வெற்றிப் பெற்றார்.

இதன் ஜப்பானுக்கு தங்கமும், இந்தியாவுக்கு சாக்ஷி மூலம் வெள்ளிப் பதக்கமும் உறுதியானது.

சாக்ஷி தனது காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் நபிரா இஸ்ன்பேவாவையும், அரையிறுதியில் கஜகஸ்தானின் கேஸிமோவாவையும் தோற்கடித்ததன் மூலம் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

அதேபோன்று வினேஷ் போகத் 55 கிலோ எடைப் பிரிவில் தனது இறுதிச் சுற்றில் ஜப்பானின் சயி நன்ஜோவியிடம் மோதி 4-8 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறினார்.

இந்தியாவின் திவ்யா காக்ரன் 69 கிலோ எடைப் பிரிவில் வெள்ளியும், ரிது போகத் 48 கிலோ எடைப் பிரிவில் வெண்கலமும் வென்று வெளியேறினர்.