Asianet News TamilAsianet News Tamil

மன வேதனையுடன் நாடு திரும்பிய வினேஷ் போகத்திற்கு பண மாலையால் உற்சாக வரவேற்பு!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதி போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் டெல்லி வந்த நிலையில் அவருக்கு பண மாலையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Indian Wrestler Vinesh Phogat Reached Delhi airport and Grand Welcome by Fans, Family and Mates rsk
Author
First Published Aug 17, 2024, 4:43 PM IST | Last Updated Aug 17, 2024, 4:43 PM IST

பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று இந்தியா திரும்பினார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் உறவினர்கள், சக மல்யுத்த வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் வினேஷ் போகத்தை வரவேற்க வந்திருந்தனர்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட கட்டாயப்படுத்தப்படும் ரோகித், கோலி! உண்மை என்ன?

வரவேற்பின் போது உணர்ச்சிவசப்பட்ட வினேஷ், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதுபோன்ற ஆதரவைப் பெற்றதில் தான் பாக்கியசாலி என்றும் வினேஷ் கூறினார். தனது மகளுக்கு கிடைத்த வரவேற்பு தங்கப் பதக்கத்தை விட மதிப்புமிக்கது என்று வினேஷின் தாய் கூறினார். வரவேற்புக்குப் பிறகு, அவர் சொந்த ஊரான ஹரியானாவின் சார்கி தாத்ரியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வார். அங்கு, காட் பஞ்சாயத்து ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சிகளில் வினேஷ் கலந்து கொள்வார். முன்னதாக, ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதாக மறைமுகமாகக் குறிப்பிட்டு வினேஷ் போகத் எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று இப்போது சொல்ல முடியாது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் விளையாட தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். தனது பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு வினேஷ் போகத் நன்றி தெரிவித்தார். ஆதரவு ஊழியர்களின் கடின உழைப்பு தனக்குத் தெரியும் என்று கூறினார். ஆதரவு ஊழியர்கள் மீது இந்திய ஒலிம்பிக் சங்கம் குற்றம் சாட்டியதை அடுத்து வீராங்கனை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். பெண்களின் கண்ணியத்திற்காகவும் நாட்டின் மதிப்புகளுக்காகவுமே மல்யுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டேன்.

டி20, ஒருநாள் போட்டியில் வெள்ளை; டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஏன் சிவப்பு பந்து தெரியுமா?

நீதிக்கான போராட்டம் தொடரும். பாரிஸில் இந்தியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பது எனது விருப்பம் என்று வினேஷ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போராட்டம் தொடரும் என்பதையே போகத் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்றவரைப் போல போகத்தை வரவேற்போம் என்று மாமா மகாவிர் போகத் தெரிவித்திருந்தார். நீதிமன்றத் தீர்ப்பால் அனைத்து பதக்க கனவுகளும் கனவாகவே போய்விட்டன. ஓய்வு முடிவில் இருந்து வினேஷை பின்வாங்க வைக்க முயற்சிப்போம் என்றும், அடுத்த ஒலிம்பிக்கிற்கு தயாராகுமாறு அவரை ஊக்குவிப்போம் என்றும் மகாவிர் போகத் கூறினார். சங்கீதா போகத் மற்றும் ரிது போகத்தை அடுத்த ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்துவோம் என்றும் மகாவிர் போகத் தெரிவித்தார்.

அதிகமாக சம்பளம் வாங்கும் வீராங்கனை: பிவி சிந்துவின் நிகர சொத்து எவ்வளவு?

50 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்தது காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios