Indian women team got hat-trick victory over Pakistan

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளது இந்திய மகளிர் அணி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டம் இந்தியா – பாகிஸ்தான் இடையே இங்கிலாந்தின் டெர்பி நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியத் தரப்பில் பூனம் ரெளத் 47 ஓட்டங்களையும், சுஷ்மா வர்மா 33 ஓட்டங்களையும், தீப்தி சர்மா 28 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் நஷ்ரா சாந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 38.1 ஓவர்களில் 74 ஓட்டங்களுக்கு மொத்தமாகச் சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சனா மிர் 29 ஓட்டங்களையும், நஹிதா கான் 23 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் இக்தா பிஸ்த் அபாரமான பந்து வீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவின் இந்த வெற்றியின்மூலம் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்று ஹாட்ரிக் வெற்றிப் பெற்ற அணி என்ற பெருமையைப் பெற்றது இந்தியா மகளிர் அணி.