Indian women team defeated South Africa by nine wickets
மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் ஈஸ்ட் லண்டன் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்ட ங்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய இந்தியா 19.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
டாஸ் வென்ற இந்தியா பந்துவீச, பேட் செய்த தென் ஆப்பிரிக்காவில் சுனே லஸ் அதிகபட்சமாக 33 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் பூனம், பாட்டீல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் மிதாலி ராஜ் 76 ஓட்டங்கள் , கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். ஸ்மிருதி மந்தனா 57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
