Indian women defeat Australia in badminton
உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
உலக குழு சாம்பியன் போட்டி (தாமஸ், உபேர் கோப்பை) பாங்காக்கில் நடந்து வருகிறது.
ஏற்கெனவே இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ், கனடாவிடம் தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று நடைபெற்ற உபேர் கோப்பை ஆட்டத்தில் சாய்னா நேவால் தலைமையிலான மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.
சாய்னா 2-0 என்ற செட்கணக்கில் சுவான்வெண்டி சென்னை வென்றார்.
வைஷ்ணவி ரெட்டி 2-0 என்ற கணக்கில் ஜெனிபர் டாமை வீழ்த்தினார்.
அனுரா பிரபுதேசாய் 2-0 என எசிலி பங்கை வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவில் சனியோகிதா - கோர்பட இணை வென்றது.
