மாதவிடாய் காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை இழந்தேன் – பளூதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் பளுதூக்குதல் போட்டியில் மகளிருக்கான 49கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 4ஆவது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதற்கு மாதவிடாய் பிரச்சனை தான் காரணம் என்று தற்போது கூறியிருக்கிறார்.

Indian Weigtlifter Saikhom Mirabai Chanu said that lost My Olympic medal due to Periods at Paris 2024 Olympics rsk

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்கை விட அதிகளவில் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா 4 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 5 வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 64ஆவது இடத்தில் உள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தனர். மேலும், ஹாக்கி போட்டியில் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா வெண்கலப் பதக்க வாய்ப்பில் பங்கேற்று 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதைத் தொடர்ந்து, ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 103 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம், 74 பதக்கங்களுடன் சீனா 2ஆவது இடம்!

இதன் மூலமாக இந்தியா மொத்தமாக 5 பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது. ஆனால், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், தடகளம் என்று பல போட்டிகளில் இந்தியா பதக்கத்தை வென்றது. இந்த நிலையில்தான், பளுதூக்குதல் வீராங்கனையான மீராபாய் சானு தான் பதக்கம் இழந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் நான் பதக்கத்தை இழந்தேன். அதற்கு காரணம், மாதவிடாய் காரணமாக சற்று பலவீனமாக இருந்தேன். போட்டி நடைபெற்ற போது மாதவிடாய் ஏற்பட்டு தனக்கு 3ஆவது நாள் என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

விளையாட்டு வீராங்கனைகள் மாதவிடாய் பற்றி சற்று விவரிக்கின்றனர். அவற்றை பற்றி பார்க்கலாம்…

ஃபூ யூவான்ஹூய்

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரில், சீனாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஃபூ யூவான்ஹூய் 4*100மீ மெட்லே ரிலே இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர், நேற்று தான் தனக்கு மாதவிடாய் தொடங்கியது. அதனால் தான் நான் பலவீனமாகவும், சோர்வாகவும் இருந்தேன். இறுதிப் போட்டியில் நான் நன்றாக நீந்தவில்லை என்று கூறினார்.

அலி ரைஸ்மேன்

கடந்த 2017 ஆம் ஆண்டு காஸ்மோபாலிட்டன் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் 6 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், அமெரிக்காவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலி ரைஸ்மேன் வேறு வழியில்லாததால் போட்டிகளின் போது மாதவிடாய் வலியை சமாளிக்க வேண்டியிருந்தது என்றார். மாதவிடாய் காலத்தில் சோர்வாக இருக்கும் போது போட்டியை தள்ளி வைக்கவோ, நடுவர்களிடமோ தெரிவிக்க முடியாது என்றார்.

இந்தியாவிற்கு வெள்ளி வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து – காயம் குறித்தும் கேட்டறிந்தார்!

லோனா செம்டாய் சல்பீட்டர்:

டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது மாதவிடாய் மிகவும் மோசமாக இருந்ததால், தனது ஓட்டப் பந்தயத்தின் போது ஓய்வெடுப்பதற்கு நிறுத்த வேண்டியிருந்தது என்று இஸ்ரேலிய மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை லோனா செம்டாய் சல்பீட்டர் கூறினார்.

இலோனா மஹேர்:

அமெரிக்க ரக்பி வீராங்கனையான இலோனா மஹேர் ஒரு டிக்டாக் வீடியோவில் மாதவிடாய் காலத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு 50 டம்பன்கள் மற்றும் 5 ஜோடி பேண்டீஸ்கள்" எடுத்துச் சென்றதாக கூறினார்.

வு யானி:

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற 100மீ தடை தாண்டுதல் ஓட்டப்போட்டியில் சீனாவின் வு யானி 6ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இதற்கு காரணம், அவரது மாதவிடாய் காலங்களை குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios