இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலக கோப்பை நடக்க இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தற்போதே தொடங்கியுள்ள பிசிசிஐ, வீரர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்துள்ளது.
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலக கோப்பை நடக்க இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தற்போதே தொடங்கியுள்ள பிசிசிஐ, வீரர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்துள்ளது.
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் பிசிசிஐ தற்போதே ஈடுபட தொடங்கிவிட்டது. அதற்காக வீரர்களுக்கான ஹோட்டல், உணவு தேவைகள் ஆகியவை குறித்து அணி நிர்வாகத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
அப்போது வீரர்கள், தாங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு வசதியாக ஜிம் அமைந்துள்ள ஹோட்டலை புக் செய்யுமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அண்மையில் இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய வீரர்களுக்கு தேவையான பழங்கள் கொடுக்கப்படவில்லை.

எனவே வாழைப்பழம் வேண்டும் என்ற தங்களது தேவையை இந்திய அணி தெரிவித்துள்ளது. வாழைப்பழம் உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை வழங்க வல்லது. எனவேதான் விளையாட்டு வீரர்கள் உடனடி ஆற்றல் தேவைக்கு வாழைப்பழத்தை உண்ணுவர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தேவையான பழங்கள் கிடைக்கவில்லை என்பதால் வீரர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வாழைப்பழத்தை அணி மேலாளரிடம் சொல்லி பிசிசிஐயின் செலவில் பெற்றுக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
