Indian team Chennai team pantatiyatu
சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்துப் போட்டியில் இந்தியன் வங்கி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பந்தாடி வெற்றிப் பெற்றது சென்னை சிட்டி எஃப்சி அணி.
சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில், செயின்ட் ஜோசப் குழுமம் - சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், நேற்றைய ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்சி - இந்தியன் வங்கி அணிகள் எதிர்கொண்டன.
இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு சென்னை அணிக்கே கிடைத்தது. முதல் வெற்றி முற்றிலும் வெற்றி என்பது போல வெற்றி சென்னைக்கே கிடைத்தது.
இறுதி ஆட்டத்தின் முதல் பாதி நேர முடிவுக்குப் பிறகு வழங்கப்பட்ட கூடுதலான மூன்று நிமிடத்தில் சென்னை வீரர் சூசை ராஜ் கோல் அடிக்க, சென்னை சிட்டி எஃப்சி 1-0 முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்த நிலையில், 89-ஆவது நிமிடத்தில் இந்தியன் வங்கி வீரர் அபியோடன் ஒலாஸ்டோ ஜோசப் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
இதனையடுத்து போட்டி நேர முடிவுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் சென்னை வீரர் ஜாசெப் ஐ கெசுக்கு ஒரு கோல் அடித்து சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
இதனால், சென்னை சிட்டி எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
