Asianet News TamilAsianet News Tamil

திணுசு திணுசா அவுட்டாகுறாரு.. தம்பி உங்களுக்கு இன்னும் சின்ன பையன்னு நினைப்பா? பொறுப்பா ஆடுங்க.. இல்லைனா கிளம்புங்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளி விஜய் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக களமிறக்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும் பிரித்வியுடன் ராகுல் களமிறக்கப்பட்டார். 

indian team batting coach sanjay bangar warning kl rahul
Author
Australia, First Published Nov 29, 2018, 5:08 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர் தோல்வியை தழுவிவரும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்தி தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் சிதைந்து போய், தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் உள்ளது. 

இரு அணிகளுமே டெஸ்ட் தொடரை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. இதற்கிடையே அந்த தொடருக்கு தயாராகும் விதமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா லெவன் அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும் பிரித்வி ஷாவும் களமிறங்கினர். ராகுல் இந்த வாய்ப்பையும் தவறவிட்டு மீண்டும் சொதப்பினார். வெறும் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே சிறப்பாக ஆடினர். பிரித்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 55 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அனுபவமற்ற பவுலர்களின் பந்துவீச்சில் ஆல் அவுட்டானது கொடுமை. அதிலும் அவர்களின் பவுலிங்கிலேயே ராகுல் 3 ரன்களில் அவுட்டானது அதைவிட பெரிய கொடுமை. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளி விஜய் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக களமிறக்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும் பிரித்வியுடன் ராகுல் களமிறக்கப்பட்டார். இம்முறையும் சொதப்பினார். 

ராகுல் தொடர்ந்து சொதப்பிவரும் பட்சத்திலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடர் இது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என வெளிநாடுகளில் தொடர்ந்து தோற்றுவரும் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடரில் வெல்வது மிக முக்கியம். எனவே முக்கியமான இந்த தொடரில் அணி தேர்வும் மிக முக்கியமான ஒன்று. வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டுகளை வைத்திருக்கும் முரளி விஜயை புறக்கணித்துவிட்டு பயிற்சி போட்டியில் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அதற்கேற்றாற்போலவே வழக்கம்போல வந்ததுமே பெவிலியனுக்கு திரும்பி அதிர்ச்சியளித்தார் ராகுல். ராகுல் தொடர்ந்து சொதப்புவதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 

indian team batting coach sanjay bangar warning kl rahul

இந்நிலையில், தொடர்ந்து சொதப்பிவரும் ராகுல் குறித்து பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், ராகுல் நல்ல நிலையில் தான் உள்ளார். எனினும் அவுட் ஆவதற்கு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து அவுட்டாகிறார். பயிற்சி போட்டியில் கூட பந்துக்கும் உடலுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தபோதும் அதை அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் எங்களுடைய நம்பிக்கை என்னவென்றால், ஒரு இன்னிங்ஸில் நன்றாக ஆடிவிட்டால் ஃபார்முக்கு வந்துவிடுவார் என்பதே. அவரது திறமை எங்களுக்கு தெரியும். அவர் நன்றாக ஆடுவது அணிக்கு முக்கியம். 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளார். எனவே அவர் இன்னும் இளம் வீரர் அல்ல என்பதை உணர்ந்து பொறுப்புடன் ஆட வேண்டும் என்றார்.

மேலும் தொடக்க வீரர் மற்றும் 6வது வரிசை வீரர் ஆகிய இரண்டு இடத்தையும் இன்னும் யாருக்கு என்று உறுதி செய்யவில்லை என்றார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios