வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் அடுத்த மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலுமே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

தோனி ஃபார்மில் இல்லாததால் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். ரன்கள் எடுக்க திணறிவருகிறார். எனவே அவர் நீக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கோலி ஆடுவதால் அவரே கேப்டனாக செயல்படுவார். 

தோனி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். தினேஷ் கார்த்திக்கிற்கு இரு அணிகளுக்கு எதிரான தொடரிலுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராகுல், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய நதீமிற்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், நதீம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ்.