வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது. 

இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த போட்டியிலும் இளம் வீரர் மயன்க் அகர்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

முதல் போட்டியில் ஆடிய அதே அணி தான் இரண்டாவது போட்டியிலும் ஆட உள்ளது. இந்தியா ஏ அணியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் அபாரமாக ஆடிய மயன்க் அகர்வாலுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் வீரர்கள் பலரும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில் வைத்து அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மயன்க் அகர்வாலை அணியில் ஆடவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் இம்முறையும் மயன்க் அகர்வால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

பிரித்வி ஷா, கேஎல் ராகுல், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

12வது வீரராக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.