Indian shooters to gold Equaling the world record

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின், ஷாட்கன் உலகக் கோப்பை போட்டியில், இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கம் வென்று உலக சாதனையை சமன் செய்தார்.

மெக்ஸிகோவில் நடைபெற்று வரும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) ஷாட்கன் உலகக் கோப்பை போட்டியின் தகுதிச்சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட அங்குர் மிட்டல் மொத்தம் 138 புள்ளிகளுடன் 2-ஆவது இடம் பிடித்தார்.

ஆனால், சீன வீரர் யிங் கீயும் அதே புள்ளிகளைப் பெற்றதால் இருவருக்கும் இடையே டை-பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

6-5 என்ற கணக்கில் முன்னேறிய அங்குர் மிட்டல், 2-ஆவது இடத்தை உறுதி செய்து, 6 போட்டியாளர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்றில் கால்பதித்தார்.

அதில், நிர்ணயிக்கப்பட்ட 80 இலக்குகளில் 5-ஐ மட்டும் தவறவிட்ட அங்குர் மிட்டல், 75 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்ததுடன் உலக சாதனையையும் சமன் செய்தார்.

ஷாட்கன் உலகக் கோப்பை போட்டியின் முதல் பதக்கத்தை இந்தியா தங்கமாக பதிவு செய்துள்ளது.

அவருக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் வில்லெட் 7 இலக்குகளை மட்டும் தவறவிட்டு, 73 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தார்.

சீனாவின் யிங் கீ 52 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.