Indian shooter wins gold in international shootings...

ஏடிபி சர்வதேச தரவரிசைப் பட்டியலில் மீண்டும் உலகின் முதல்நிலை வீரரானார் ரோஜர் ஃபெடரர்.

உலகின் முதல்நிலை வீரராக நடாலும், இரண்டாம் நிலை வீரராக பெடரரும் நீடித்து வந்த நிலையில் மாட்ரிட் ஓபன் போட்டியில் காலிறுதியில் நடால் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். 

இதனால் புள்ளிகளை இழந்த நடால் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த மார்ச் மாதம் முதல் எந்த போட்டியில் பங்கேற்காத நிலையிலும் ஃபெடரர் தற்போது மீண்டும் முதல்நிலை வீரர் ஆகியுள்ளார்.

முன்னாள் முதல் நிலை வீரரான ஜோகோவிச் 18-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். 

மாட்ரிட் ஓபன் சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவ் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஏடிபி சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த வீரர்கள்;

ரோஜர் ஃபெடரர் (8670 புள்ளிகள்+1), நடால் (9950-1), அலெக்சாண்டர் வெரேவ் (6015), கிரிகோர் டிமிட்ரோவ் (4870), மரின் சிலிச் (4470), ஜுவான் டெல் போட்ரோ (4540), கெவின் ஆண்டர்சன் (3360), டொமினிக் தீம் (3545), ஜான் ஐஷ்நர் (3305), டேவின் கோபின் (2930).