Indian shooter wins gold in international shootings

ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்று அசத்தினார். நிவேதா வெண்கலம் வென்றார். 

வரும் 22 முதல் 29-ஆம் தேதி வரை உலக துப்பாக்கி சுடும் போட்டிகள் நடக்கின்றன. ஜெர்மனியின் முனிக் நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கு இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தயாராகி வருகின்றனர். 

இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஹீனா சித்துவும் இதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். அதனொரு பகுதியாக நேற்று நடைபெற்ற ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் கலந்து கொண்டார்.

இதன், மகளிர் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில் ஹீனா தங்கம் வென்று அசத்தினார். சக வீராங்கனையான நிவேதா வெண்கலம் வென்றார். பிரான்ஸ் வீராங்கனை மதில்டே லமோலை பின்னுக்கு தள்ளி ஹீனா தங்கம் வென்றார். 

இதுதொடர்பாக ஹீனா, "தற்போது எனது பயிற்சி மேம்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பெற்ற வெற்றி உலக துப்பாக்கி சுடும் போட்டிக்கான அனுபவத்தை தந்துள்ளது. சரியான திசையில் எனது பயிற்சி செல்கிறது" என்று அவர் தெரிவித்தார்.