இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் தொடங்கி நடந்துவருகிறது. 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், மூன்றாவது போட்டியில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முறையே ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கடந்த போட்டியில் ஆடிய குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய விரும்பியதால், இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவானும் ராகுலும் நிதானமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து வருகின்றனர். இந்திய வீரர்கள் ஜெர்சியில் கருப்பு பேட்ச் அணித்து களமிறங்கியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் கடந்த 15ம் தேதி காலமானார். 

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான அஜீத் வடேகர், கடந்த 15ம் தேதி காலமானதை அடுத்து அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் கருப்பு பேட்ச் அணித்துள்ளனர். அஜீத் வடேகரின் கேப்டன்சியில்தான் இந்திய அணி முதன்முறையாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிகளை 1971ம் ஆண்டு வீழ்த்தி வெற்றி கண்டது. 

இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகலுக்கு கேப்டன்சி செய்துள்ளார். மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான வடேகரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் ஜெர்சியில் கருப்பு பேட்ச் அணிந்துள்ளனர்.