Indian players are not argue payattaltan failure Stark Action

டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் தான் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய வீரர்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர் என்று ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறினார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கும் அடிக்கடி ஏற்பட்டு வரும் வாக்குவாதம் குறித்து அவர் கூறியது:

வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, எங்கள் தரப்பைக் காட்டிலும், இந்திய அணி தரப்பில் இருந்துதான் அதிகம் வருகிறது. இந்திய அணியினரை அவர்களது சொந்த மண்ணிலேயே தோற்கடித்துவிடுவோம் என்ற பயம் அவர்களிடம் இருக்கிறது. அதைதான் அவர்களது ஆட்டமும் உறுதி செய்கிறது. அதை திசை திருப்பவே, இந்திய வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள், வாக்குவாதம் செய்வதையே கையில் எடுத்துவிட்டனர்.

என்னைப் பொருத்த வரையில், இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெல்லும்.
நாங்கள் இந்தச் சவாலுக்குத் தயாராக உள்ளோம் என்பதை இந்தத் தொடர் முழுவதுமாகவே வெளிக்காட்டி வருகிறோம்” என்று ஸ்டார்க் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த ஸ்டார்க், காயம் காரணமாக பாதியிலேயே தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.