indian players advanced to next round in Asian Women Boxing
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா லேதர் மற்றும் நீரஜ் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இதில், 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் சோனியா லேதர் தனது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஜப்பானின் குரோகி கானாவை வீழ்த்தினார். லேதர் தனது அடுத்த சுற்றில் சீனாவின் யின் ஜுன்ஹுவாவுடன் இன்று மோதுகிறார்.
இதேபோல், 51 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள இந்தியாவின் நீரஜ், மியான்மர் வீராங்கனை நாலி நாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அரியாணாவைச் சேர்ந்த நீரஜ், ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை.
நீரஜ் தனது காலிறுதியில் தென் கொரியாவின் பாங் சோல் மியை எதிர்கொள்கிறார்.
