இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்‍கெட் அணி இன்று அறிவிப்பு : கேப்டனாக கோலி நியமனம்? 

இங்கிலாந்துக்‍கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்‍கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி, மும்பையில் இன்று அறிவிக்‍கப்படவுள்ளது. கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதை அடுத்து, இவ்விரு தொடர்களுக்‍கும் விராட் கோலியே கேப்டனாக நியமிக்‍கப்படுவார் என எதிர்பார்க்‍கப்படுகிறது.

இந்தியாவுக்‍கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்‍கில் இழந்த இங்கிலாந்து அணி, அடுத்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில், முதலாவதாக ஒருநாள் கிரிக்‍கெட் போட்டித் தொடர், வரும் 15-ம் தேதி, புனேவில் தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்‍கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்‍கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்‍கெட் அணியை தேர்வு செய்வதற்காக, மும்பையில் இன்று பி.சி.சி.ஐ. தேர்வுக்‍குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. இதன் முடிவில், இங்கிலாந்து தொடருக்‍கான இந்திய அணி அறிவிக்‍கப்படவுள்ளது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்‍கான கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகுவதாக அறிவித்ததை அடுத்து, இருவிதமான போட்டிகளுக்‍கும் விராட்கோலியே கேப்டனாக நியமிக்‍கப்படுவார் என எதிர்பார்க்‍கப்படுகிறது.